Wednesday, October 14, 2009

 

ஹோட்டல் சாம்பார் செய்முறையை சொல்லித் தருவீர்களா?


ன் பெண்ணுக்கு ஹோட்டல் சாம்பார் ரொம்பவும் பிடிக்கிறது. ஆனால் எனக்கு ஹோட்டலில் வைப்பது போல சுவையாகவும், மணமாகவும் சாம்பார் வைக்கத் தெரியவில்லை. எனக்கு, ஹோட்டல் சாம்பார் செய்முறையை சொல்லித் தருவீர்களா?

நிச்சயம் சொல்லித் தருகிறேன்.நான் சொல்லும் அளவில், உங்கள் வீட்டுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளுங்கள்.


500 கிராம் துவரம் பருப்பை சிறிதளவு மஞ்சள் தூளுடன் லு லிட்டர் தண்ணீரில் நன்றாக தண்ணீராக வேக வையுங்கள்.

150 கிராம் புளியை 3 டம்ளர் தண்ணீரில் கரைத்து, அத்துடன் 4 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் தனியாத்தூள், வெல்லம் சிறியக் கட்டி, தேவையான அளவு, 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கடலைப் பருப்பு 50 கிராம், தனியா 50 கிராம், காய்ந்த மிளகாய் 25 கிராம், பெருங்காயம் 10 கிராம், 4 கறிவேப்பிலை, ஒரு டீஸ்பூன் வெந்தயம், 1/2 மூடி தேங்காய் துருவல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பை முக்கால் பதம் மட்டும் வறுபட்டபின், காய்ந்த மிளகாயைப் போட்டு வறுக்கவும். பிறகு தனியா, கறிவேப்பிலை, வெந்தயம், தேங்காய் துருவல் ஆகியவைகளை இதே வரிசையில் வறுத்து மிக்ஸியில் அரைக்கவும்.

ஒரு டீஸ்பூன் எண்ணெயில் 50 கிராம் சிறிய வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு (10 கிராம்), மிளகாய் வற்றல் (5), சிறிய வெங்காயம் (100 கிராம்), கறிவேப்பிலை சிறிதளவு ஆகியவைகளைப் போட்டு நன்றாக வறுத்து இதை கொதிக்கும் புளிக்கரைசலில் உடனே போடவும். இத்துடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பருப்பு அரவையையும், வெங்காய அரவையையும் போட்டு கொதிக்கவிடவும். கடைசியாக வேக வைத்துள்ள பருப்புக் கரைசலையும் சேர்த்து கொதிக்கவிடவும். சாம்பாரை கீழே இறக்கி, அதில் நெய்யில் வதக்கிய சிறிதளவு தேங்காய் துருவலை சேருங்கள். மணமணக்கும் ருசியான ஹோட்டல் சாம்பார் ரெடி.

இந்த தீபாவளிக்கு இதோ அறுசுவை அரசு தரும் சில பட்சண டிப்ஸ்கள்!

? அதிரசத்துக்கு பாகு எடுக்கும்போது, பாகை சிறிதளவு தண்ணீரில் போட்டு எடுத்து உருட்டிக் கொள்ளவும். இதைக் கீழேப் போட்டால் டங்னு லேசாக சத்தம் வர வேண்டும். இதுதான் அதிரச பாகு பதம்!

? நிறையப் பேர் உக்காரையை கடலைப் பருப்பில் செய்வார்கள். இது கடினமாக இருக்கும். துவரம் பருப்பில் உக்காரை செய்து பாருங்கள். சாஃப்ட்டாக இருக்கும்.

?மைதா மாவை பிசைந்து 3 மணி நேரம் கழித்துத் தட்டினால் போளி ஜவ்வாக இல்லாமல் மெத்தென்று இருக்கும்.

? சர்க்கரை அதிரசம் செய்யும்போது ஒரு கிலோ அரிசிமாவுக்கு, ஒரு கிலோ சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமாக இருந்தால் கறுக்கும். அதேபோல, கம்பிப்பாகுக்கு முன்னாடி பதத்தில் எடுத்தால்தான் சர்க்கரை அதிரசம் உதிர்ந்து போகாமல் வரும். சர்க்கரை பாகு எடுக்கும்போது, சர்க்கரைக்கு மேலே அரை இன்ச் தண்ணீர் இருக்கவேண்டும். பாகு வந்த பின் இந்த சுடுநீரில்தான் மாவு வேக வேண்டும்.

? கொழுப்புச் சத்து சிறைந்த பாலில் (4.5 மேல் கொழுப்புச் சத்து இருக்கவேண்டும்) பாலில்தான் திரட்டுப்பால் செய்ய முடியும். ஆவின் பால்ஓ.கே!... திரட்டுப்பால் செய்ய ஸ்கிம்டு மில்க், டோண்டு மில்க் நாட் ஓ.கே.!

?நிறையப் பேர் என்னிடம், நெய்யை குறைவாக விட்டு, சாஃப்ட்டாக மைசூர் பாகு செய்ய முடியுமா என்கிறார்கள். நிச்சயம் அப்படி முடியாது. மைசூர்பாகு சாப்ட்டாக வருவதற்கு காரணமே நெய்தான்!

?தேங்காய் பர்பி கெட்டியாக வர ரவை சேர்ப்பதாகச் சொல்கிறார்கள் சிலர். சூடான பாகில் ரவையைப் போட்டால் அது வேகாமல் விறைத்துக் கொண்டுதான் நிற்கும். இந்த பர்பியில் ரவை சேர்க்கத் தேவையில்லை! தேங்காயைத் துருவியும் பர்பி செய்யலாம். தேங்காயை அரைத்து பர்பி செய்தால், வயதானவர்கள் சாப்பிடும்போது பல்லில் சிக்கிக் கொள்ளாது.


Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]