Wednesday, October 14, 2009
பால்பாயசம் எப்படிச் செய்வது?
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - ஒரு டம்ளர், நெய் - 1/2 டம்ளர், பால் - 8 அல்லது 9 டம்ளர், தண்ணீர் - 3 அல்லது டம்ளர், சர்க்கரை - 2 டம்ளர், பொடித்த ஏலம் - 2.
செய்முறை: பாசுமதி அரிசியை 4 தடவை அலம்பி நீரை சுத்தமாக வடிய விடவும். வாணலியில் நெய்யை விட்டு, உருகியதும், அதில் அரிசியை போட்டு வறுத்துக் கொள்ளவும். அரிசியை வறுத்துக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு ஸ்டவ்வில் தண்ணீரைக் கொதிக்க விடவும்.

அரிசி வறுபட்டவுடன் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, அரிசியை நன்கு வேக விடவும். அரிசி, சாதம் பக்குவத்தில் வெந்ததும், அதில் பாலை ஊற்றி நன்கு குறுகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். தேவையான பொருட்கள் அனைத்தும் சேர்ந்து 13 டம்ளர் போல வருபவை பிறகு சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறி, கீழே இறக்கவும். கீழே இறக்கிய பிறகு ஏலப்பொடி சேர்க்கவும்.
அடுப்பில் இருக்கும்போதே ஏலப்பொடி சேர்த்தால் பாயசம் கசந்து விடும்., முந்திரி, திராட்சை உங்கள் விருப்பம்.
Subscribe to Posts [Atom]
Post a Comment