Wednesday, October 14, 2009

 

கோயிலில் செய்வது போன்ற புளியோதரை ...

கோயிலில் செய்வது போன்ற புளியோதரை எப்படி செய்வதென்று சொல்லி தருவீர்களா?

புளிக் காய்ச்சல் செய்வதற்கு பழைய புளி - 100 கிராம்,
புதிய புளி - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 25,
தனியா - 50 கிராம்,
கடலைப்பருப்பு - 50 கிராம்,
பெருங்காயம் - சிறிய நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்,
தோல் நீக்கி, வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், முந்திரிப்பருப்பு-10, நல்லெண்ணெய், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன் ஆகிய பொருட்கள் தேவைப்படும்.

செய்முறை: புளியை நீர்க்கக் கரைத்து வைக்கவும். வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் 15, பெருங்காயம் ஆகியவைகளை எண்ணெயில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து, இந்த மேம்பொடியை தனியாக வைக்கவும்.

வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும், அதில் மீதமுள்ள காய்ந்த மிளகு, கடுகு, சிறிதளவு பெருங்காயம், 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு ஆகியவைகளைப் போட்டுத் தாளிக்கவும். இதில் ரெடியாக உள்ள புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். கொதிக்கும்போதே உப்பு, மஞ்சள்தூள். இரண்டையும் போட்டு விடுங்கள். புளிக் கரைசல் திக்காகும் போது ரெடியாக அரைத்து வைத்துள்ள மேம்பொடியை அதன் மேலே தூவி இன்னும் கொதிக்க விடவும். புளிக்காய்ச்சலின் மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது கீழே இறக்கி விடவும். இதை சாதத்துடன் கலந்தால், புளியோதரை ரெடி!

Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]