Friday, November 20, 2009
அவல் ஸ்பெஷல் பொங்கல்
தேவையானவை: அவல் - ஒரு கப், பயத்தம்பருப்பு - அரை கப், வெல்லம் - ஒரு கப், மில்க்மெய்ட் - கால் கப், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, காய்ந்த திராட்சை, பாதாம் - சிறிதளவு.
செய்முறை: பயத்தம்பருப்பை லேசாக வறுத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் அவலை வெறும் கடாயில் வறுத்து, பயத்தம்பருப்புடன் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியாக வந்ததும் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி அவல் கலவையில் சேர்க்கவும். நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக வந்ததும் இறக்கி, மில்க்மெய்டை சேர்த்துக் கிளறி.. பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் தூவி பரிமாறவும்.
# posted by Nagaraji.B @ 4:57 PM

Subscribe to Posts [Atom]
Post a Comment