Tuesday, February 16, 2010

 

தக்காளி

மாரடைப்பு ஏற்படாமல் இருக்கவும், இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் ஆஸ்பிரின் விழுங்குபவர்கள் உண்டு. இப்படித் தொடர்ந்து ஆஸ்பிரின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் புண் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிற்றில் இரத்தக் கசிவும் ஏற்படலாம். இதைத் தடுக்க ஏற்கெனவே ஆஸ்பிரினுக்குப் பதிலாக பேரீச்சம்பழத்தில் நான்கு சாப்பிட்டு வந்தாலே போதும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

தற்போது தக்காளியும் சாப்பிட்டு வரலாம் என்று பிரிட்டனின் ரோவெட் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆசிம்தத்தா ராய் என்பவர் கூறுகிறார். தக்காளியில் மஞ்சள் நிறத்தில் உள்ள விதைகள் இரத்த உறைவைத் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் சீரமைத்து விடுவதால் நெஞ்சுவலி, மாரடைப்பு பிரச்னை இன்றி வாழலாம் என்று கூறியுள்ளார். இந்த மஞ்சள் நிற விதைகள் புற்றுநோய்க் கட்டிகளை கரைப்பதையும் ஏற்கெனவே நிரூபித்துள்ளனர்.

தினமும் மூன்று தக்காளிப் பழங்களை நன்கு கழுவிவிட்டுச் சாப்பிடவும்.இதன் மூலம் அதிகம் பசிப்பது தடுக்கப்படுவதால், குறைவாகச் சாப்பிடலாம். உடல் எடையும் நமது கட்டுப்பாட்டில் இருக்கும்.

இரண்டாவது மாரடைப்பு, இதய நோய், புற்றுநோய் அபாயம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

மூன்றாவது, உடல் ஒல்லியாகவும் முகம் அழகாகவும், தோல் பளிச் என்று சிவப்பாகவும் மாறிவிடும்.

குண்டாக உள்ளவர்கள் தினமும் 3 தக்காளிப் பழங்களை தொடர்ந்து சில மாதங்களாவது சாப்பிட்டு வந்தால் உடல் எடை எளிதாகக் குறைவதை உணரலாம்.

பாசிப்பருப்புக் கூட்டிற்கு அடுத்து நம்மை அதிகம் சாப்பிடவிடாதபடி தடுப்பது தக்காளிதான். மதிய உணவின்போது முதலில் தக்காளி சூப் அருந்தினால் குறைவாகச் சாப்பிடலாம்.

காலையில் சாப்பிட்ட உணவோ, இரவில் சாப்பிட்ட உணவோ ஜீரணமாகாமல் இருந்தால் மூன்று தக்காளியை சாறாகவோ அல்லது கடித்தோ சாப்பிடவும். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நன்கு பசிக்கும்.

பசியை ஏற்படுத்த தக்காளிச் சாறு, அதிகப் பசியை மட்டுப்படுத்த தக்காளி சூப் என்று விதவிதமாக உதவுகிறது தக்காளி.

எனவே, தக்காளிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். சிவப்பழகும், நீண்ட ஆயுளும் உறுதி.

சிறந்த உடல் நலத்திற்கு...

குழந்தைகளுக்கு ஒவ்வொரு வேளை உணவின் போதும் ஒரு கோப்பை பால் அருந்தக் கொடுக்கவும். விரும்பவில்லை எனில் ஒரு கோப்பை தயிர் கொடுக்கவும். இவற்றில் உள்ள கால்சியம் உடலில் அதிகம் உள்ள கொழுப்புகளை கரைத்தபடியே இருக்கும்.

வீட்டில் கால்சியம் சத்து உள்ள உணவுகள் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வெங்காய வடை, கேழ்வரகுத் தோசை, முருங்கைக்கீரை என உடனடியாக சமைக்கும் விதத்தில் கால்சியம் சத்து உள்ள இது போன்ற உணவுகள் எப்போதும் இருக்க வேண்டும். உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாகச் செயல்பட கால்சியம் உப்புதான் அனைவருக்கும் தேவை. எப்போதும் புதிய தயிரும் இருப்பில் இருக்க வேண்டும்.

காலையில் சோள வறுவல் +பால் கலந்து சாப்பிடலாம். அல்லது ஒரு கோப்பை ஓட்ஸ் கஞ்சி.

இரும்புச் சத்து அதிகமுள்ள சோயாபீன்ஸ், மீன், காராமணி, கீரைவகை, காலிஃபிளவர், மாட்டுக்கறி, உலர்ந்த தேங்காய் போன்றவற்றில் எது மதிய உணவில் சேர்ந்தாலும் இவற்றில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் சி தேவை. எனவே, குழம்பு, பச்சடி போன்றவற்றில் ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடவும். அல்லது சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து ஆப்பிள் அல்லது எலுமிச்சம் பழச்சாறு அருந்தவும்.

பச்சை மிளகாயிலும் கறிவேப்பிலைத் துவையலிலும் வைட்டமின் சி உள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்துவதால் மதிய உணவில் இவை இரண்டும் இடம் பெறட்டும். கூடுதல் உணவு உடலில் சேமிப்பாகாமல் இவை கரைத்து வெளியேற்றிவிடும்.

Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]