Saturday, March 20, 2010

 

பானி பூரி

தேவையான பொருட்கள்

  • பானிக்கு:-
  • -------------
  • புதினா - 1/2 கட்டு,
  • கொத்தமல்லி தழை - 1/2 கட்டு,
  • பச்சை மிளகாய் - 2,
  • வெல்லத்தூள் - 1 தேக்கரண்டி,
  • எழுமிச்சம் பழச்சாறு - 1 பழ அளவு,
  • பேரிச்சம் பழம் - 4,
  • உப்பு - தேவையான அளவு.
  • உள்ளே நிரப்ப:-
  • ------------------
  • வேக வைத்த உருளைக்கிழங்கு - 2,
  • வேக வைத்த முளைப்பயிறு - 2 கைப்பிடி,
  • சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • உருளைக்கிழங்கை உதிர்த்து, மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
  • பானிக்குக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக அரைத்து தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
  • பானி பூரி செய்யும் முறை:-ஏற்கனவே செய்து வைத்துள்ள பூரிகளில் உப்பியவற்றை எடுத்து, நடுவில் துளையிட்டு, உருளைக்கிழங்கு கலவையை உள்ளே நிரப்பி, பானியை உள்ளே ஊற்றி, உடனே சாப்பிட வேண்டும்.

குறிப்பு:

தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயம், கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளலாம்.


Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]