Monday, March 22, 2010

 

மீந்து போன உணவு பாதுகாப்பானதா?

சமைத்த உணவை அறை வெப்பநிலையில் அதிக நேரம் வைத்திருப்பது சரியல்ல என்பது “வர்களின் முதல் கணிப்பு. அறை வெப்ப நிலையில் பாக்டீரியt�ஞ்கக்ஞ்கள் அதிகமாக வளர்கின்றன. காலை உணவிற்குப் பின் மீந்து போன உணவை உடனே ஆறவைத்து அதாவது சமைத்து 2 மணி நேரத்திற்குள் குளிர் நிலையில் ஃப்ரீசலில் சுத்தமான மூடிய பாத்திரத்திற்குள் வைப்பது உடல் சுகாதாரத்திற்குப் பாதுகாப்பானது என்கிறார்கள். மேலும் குளிர்நிலையில் வைத்திருக்கும் உணவை அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் உபயோகப்படுத்திவிடுவது உத்தமம் என்கிறார்கள்.


குளிர்நிலையிலிருந்து ஃப்ரீசரிலிருந்து வெளியே எடுக்கும் உணவை அதிக நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருக்கக்கூடாது. ஃப்ரீசரிலிருந்து எடுத்த உணவை முழுவதுமாக கொதிக்க வைத்த பின் உண்பது நல்லது. கொதிக்கும்போது கெட்ட வாடை அடிப்பது போல் சந்தேகப்பட்டால் அந்த உணவை உண்ணக்கூடாது.


ஒவ்வொரு உணவு பதார்த்தங்களுக்கும் அதற்கான நிலைப்புத்தன்மை (ஷெல்ஃப் லைஃப்) உண்டு. அதிக புரோட்டீன் மற்றும் தண்ணீர் சேர்ந்த உணவுகள் (சாம்பார், வேகவைத்ததால், பொங்கல்) சீக்கிரம் கெட்டுவிடும் வாய்ப்பு அதிகம்.


சைவ உணவுகளைவிட அசைவ உணவுகள் சீக்கிரம் கெட்டுபோகின்றன. இதுவே உப்பு, வினீகர் சேர்ந்த ஊறுகாய் போன்றவற்றை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.




மீந்துபோன உணவை ஃப்ரிசரில் வைத்து அடுத்த நாள் கொதிக்க வைத்து "லன்ச்'க்கு பேக் செய்வதும் பாதுகாப்பானதல்ல என்கிறார்கள்.


விண்ணைமுட்டும் விலை வாசி நேரத்தில் மீந்துபோன உணவை எப்படி வீணாக்குவது என்கிறீர்களா? சரியான கேள்விதான். அதற்கம் உணவு ஆலோசகர்கள் "டிப்ஸ்' தருகிறார்கள்.


* ஒவ்வொரு நேரத்துக்கம் வேண்டியதை அளவாக சமைப்பது நல்லது.


* காலையில் மீந்துபோன கறியுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து சப்பாத்திக்கு கூட்டு செய்து மாலையில் டிபனாகப் பரிமாறலாம். அல்லது பச்சை வெங்காயம் தக்காளியுடன் "சாண்ட்விச்'சாக கொடுக்கலாம்.


* சப்பாத்தியை சிறிதாக கட்செய்து அதனுடன் மீந்து��ன காய்கள், ரசத்தில் உள்ள பருப்பைச் சேர்த்து கொத்துபரோட்டா வகை உணவாக்கிக் கொடுக்கலாம். காயும் வீணாகாது. பிரெஷ்ஷாகச் சாப்பிடலாம்.


* ரசகுல்லா, குலோப் ஜாமுன் சர்க்கரை சிரப் மீந்து போனால் மில்க் ஷேக், லெமன் ஜூஸுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.




மீந்த உணவை ஃப்ரிஜ்ஜில் வைக்கும் போது கவனிக்கப்பட வேண்டியது என்ன?


* குளிர்நிலையில் உணவை பதப்படுத்தப்பட்ட உபயோகிக்கும் பாத்திரங்கள் மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும்.


* ஃப்ரிட்ஜில் ஓவர்டோஸ் செய்யக்கூடாது.


* குளிர்க்காற்று எளிதாக எல்லா பொருட்கள் மீதும் படும்படி இருக்க வேண்டும்.


முன்காலத்தில் காலையில் குளித்த பின் வாசலில் தோட்டத்துக் காயை வாங்கி உடனே நறுக்கி சாணி மெழுகிய அடுப்பில் சமைத்துச் சுடச்சுட சாப்பிட்டவர்களின் உடல் உரமாக உரைத்து நின்ற ரகசியம் இப்போதாவது புரிகிறதா?


- நன்றி: "தி ஹிந்து'


Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]