Monday, March 22, 2010

 

குறைவான துவரம் பருப்பில் மணமான சாம்பார் செய்யலாமா?

வாணலியில் ஒரு கப் தனியா, அரை கப் துவரம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து வறுக்கவும், அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு (தேவையானால்) சேர்த்து மிக்ஸியில் கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
புளிநீர் + சாம்பார் பொடி+ உப்பு+ காய்கள் கொதிக்கையில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். தேவையானால் தேங்காய் துருவலும் சேர்த்து அரைக்கலாம். சாம்பார் ருசியாக இருக்கும்.
துவரம் பருப்பு, வரமிளகாய், கொள்ளு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். துவரம் பருப்பு விலை அதிகமாக இருக்கும்போது குழம்பில் நான்கு டேபிள் ஸ்பூன் போட்டு கொதிக்கவிடலாம்.

மைக்ரோவேவ் அவனில் ஊறுகாய் மேலே தெறிக்காமல் எப்படி செய்வது?

தக்காளியை மிக்ஸியில் அரைத்து உலோக வடிகட்டியில் வடிகட்டவும். வெங்காயம், பூண்டு, இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மைக்ரோ ப்ரூப் கண்ணாடி பாத்திரத்தில் எண்ணெயில் கடுகை போட்டு ஹை பவரில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். இதில் சிவப்பு மிளகாய்த்துள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, தக்காளி விழுது, வெங்காயம், பூண்டு விழுது, பெருங்காயம், உப்பு சேர்த்து மீடியம் ஹை பவரில் பத்து நிமிடங்கள் வைக்கவும். (இடையில் இரண்டு முறை வெளியே எடுத்து கலந்து விடவும்). தொக்கு, சரியான பதத்தில் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, தேவையானால், மேலும் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மீடியம் பவரில் வைக்கவும், மைக்ரோ அவனில் செய்யும்போது தொக்கு மேலே தெறிக்காது. உங்களது பாட்டியின் பக்குவத்தில் மணமணக்கும் தக்காளி வெங்காயத்தொக்கு தயார்.



Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]