Monday, March 22, 2010

 

முருங்கைக்காய் குருமா!


தேவையான பொருட்கள் :



முருங்கைக்காய் - 4, தக்காளி-3, சின்னவெங்காயம்-10, இஞ்சி சிறுதுண்டு, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய்-4, சிவப்பு மிளகாய்-2, சோம்பு-1 டீஸ்பூன், தேங்காய் - 1/2 மூடி, மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப



தாளிக்க:



பட்டை -1, அன்னாசிப் பூ - சிறிது, கிராம்பு -1, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

செய்முறை :

முருங்கைக்காயைத் துண்டாக்கி, உள்ளிருக்கும், சதைப்பற்றை மட்டும் ஸ்பூனால், சீவி எடுத்துக் கொள்ளவும். தக்காளி, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும். தேங்காயைத் துருவி, சிவப்பு மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாய் அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். சீவிய முருங்கைக்காய் சதைப்பற்றைச் சேர்த்து வதக்கவும். சுருண்டு வரும்போது ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு வெந்ததும், அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். குழம்பு கொதித்ததும், மல்லித் தழை சேர்த்து இறக்கவும். சுவையான முருங்கைக்காய் குருமா, தயார். சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருத்தமாய் இருக்கும்.



Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]