Sunday, March 21, 2010
மருந்தாகும் வெள்ளரி!
நா வறட்சியை தடுக்க மட்டுமின்றி பலவிதமான உடல் உபாதைகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கும் அருமருந்தாகவும் வெள்ளரி பயன் தருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் வெள்ளரியைச் சாப்பிட்டால் மனதுக்கு உற்சாகம் பிறப்பதுடன், உடலுக்கும், தோலுக்கும் நன்மை பயக்கும்.100 கிராம் வெள்ளரியை அப்படியே சாப்பிட்டால் நமக்கு, கார்போஹைடிரேட் - 3.63 கிராம் , சர்க்கரை - 1.67 கிராம் , நார்ச்சத்து - 0.5 கிராம், கொழுப்புச்சத்து - 0.11 கிராம்,புரோட்டின் - .65 ராம் , விட்டமின் பி1 - 0.027 மில்லி கிராம்,விட்டமின் பி2 - 0.033 மில்லி கிராம், விட்டமின் பி3 - 0.098 மில்லி கிராம் ,விட்டமின் பி5 - 0.259 மில்லி கிராம் ,விட்டமின் பி6- 0.040 மில்லி கிராம் ,விட்டமின் இ - 2.8 மில்லி கிராம் ,கால்சியம் - 16 மில்லி கிராம் ,இரும்புசத்து - 0.28 மில்லி கிராம் ,மெக்னீசியம் - 13 மில்லி கிராம் ,பாஸ்பரஸ் - 24 மில்லி கிராம் ,பொட்டாசியம் - 147 மில்லி கிராம், சிங்க் 0.20 மில்லி கிராம் போன்ற சத்துக்கள் சத்தமின்றி வந்து சேரும்..வெள்ளரியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரஷர் சமநிலைப்படும். நெஞ்சக எரிச்சல், வயிற்று எரிச்சல், அல்சர், வாயுத்தொல்லைகளும் குணமடையும். மேலும் வெள்ளரி, கேரட் கலந்த ஜூûஸ குடித்து வந்தால் வாத சம்பந்தமான நோய்கள் குணமடையும். கண்களைச் சுற்றி வெள்ளரி துண்டுகளை வைப்பதன் மூலம் கண் எரிச்சல் மாறுவதுடன் வீக்கமும் குணமடையும். மொத்தத்தில் வெயிலினால் ஏற்படும் அத்தனை உடல், தோல் எரிச்சல்களையும் இது குணப்படுத்தும். வெள்ளரி குடித்து வருபவர்களுக்கு நீரிழிவு நோயும் மட்டுப்படும். பெண்களுக்கு தலைமுடி வளரும்
Subscribe to Posts [Atom]
Post a Comment