Sunday, March 21, 2010

 

சமையல் குறிப்புகள்

*​ வெங்காய பகோடா செய்ய மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும்.​ இதனால் பகோடா மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

*​ சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

*​ சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால்,​​ பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

*​ தேங்காய்த் துருவல் மீதியானால்,​​ அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

*​ ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.

*​

இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

*​ பூரிக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]