Friday, April 2, 2010

 

அக்கார வடிசல்!


அக்கார வடிசல்!

பெருமாள் கோயில்களில் பிரசாதமாக தரப்படும் இந்த அக்கார வடிசலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. எல்லா மாநிலங்களிலும் சரி, வட்டாரங்களிலும் சரி ரொம்பவும் ஃபேமஸாக இருக்கும் ரெசிபிகளை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும். அதாவது, அந்தந்தப் பகுதிகளில் அதிகமாக விளையும் வி¬ ளபொருள்களை வைத்துதான் அந்த ரெசிபிகள் தயாரிக்கப்பட்டிருக்கும். தென் தமிழகத்தில் ரொம்பவும் ஃபேமஸான இந்த அக்கார வடிசலின், அடிப்படையான பொருள் தமிழகத்தில் அதிகமாக பயிரிடப்படும் அரிசிதான் என்பதை கவனியுங்கள். இனி ரெசிபிக்கு போகலாம்!

ஒரு கப் பச்சரிசி, லு கப் பாசிப்பருப்பு இரண்டையும் களைந்து, ஈரம் போக சற்றே உலர வைத்து, வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர்விட்டு, அதில் வறுத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு வேக விடுங்கள். இன்னொரு அடுப்பில் 2 கப் பாலை பொங்கப் பொங்க காய்ச்சுங்கள். இந்தப் பாலை வெந்து கொண்டிருக்கும் அரிசி - பருப்பில் விட்டுக் குழைய விடுங்கள். இத்துடன் 3 கப் சர்க்கரையை கம்பிப் பாகு பதம் வைத்து அதையும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருங்கள். இல்லையென்றால் அடிப்பிடித்துவிடும். இன்னொரு வாணலியில் 100 கிராம் நெய்விட்டு, அதில் 25 கிராம் முந்திரிப் ப ருப்பு, 10 கிராம் திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து அதை அப்படியே குழைந்து ரெடியாகவுள்ள அக்கார வடிசலில் கொட்டிக் கிளறுங்கள். தேவைப்பட்டால் பச்சைக் கற்பூரம் சேருங்கள். மேலே ஒரு டீஸ்பூன் ஏலப் பொடி தூவினால் வாய்மட்டுமல்ல, வயிறு வரை இனிக்கும் சவுத் இண்டியன் பாரம்பர்ய ஸ்வீட் ரெடி!

Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]