Sunday, May 30, 2010
வெஜ் குழிப்பணியாரம்
வெஜ் குழிப்பணியாரம்
தேவையானவை: இட்லி மாவு 2 கப், துருவிய கேரட் - கால் கப், நறுக்கிய வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். கேரட், வெங்காயம் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும். இந்தக் கலவையை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, மாவை பணியாரங்களாக இட்டு, வெந்ததும் சுட்டு எடுக்கவும்.
கேரட்டுக்கு பதில், பொடியாக நறுக்கிய கோஸ், காலிஃப்ளவர் சேர்த்தோ அல்லது மூன்று காய்கறிகளும் சேர்த்தோ செய்யலாம்.
இதற்குத் தொட்டுக்கொள்ள காரச்சட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.
Subscribe to Posts [Atom]
Post a Comment