Sunday, May 30, 2010
கேரட்-பட்டாணி ரைஸ்
கேரட்-பட்டாணி ரைஸ்
தேவையானவை: சாதம் 2 கப், துருவிய கேரட் - ஒரு கப், உரித்த பட்டாணி - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, நறுக்கிய பச்சை மிளகாய் - 3, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, சோம்பு - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை மிளகாய், கேரட், பட்டாணி, உப்பு சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்ததும், சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி, புதினா தூவிக் கிளறி இறக்க, கேரட், பட்டாணி ரைஸ் ரெடி!
இதற்கு சிப்ஸ், ஆனியன் ரய்தா சரியான சைட் டிஷ்.
Subscribe to Posts [Atom]
Post a Comment