Monday, July 19, 2010
கோபா பெப்பர் பிஸ்கட்
தேவையானவை: மைதா மாவு, கடலை மாவு, வறுத்த வேர்க்கடலைப் பொடி - தலா ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவை சலித்து... மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடலை மாவில் மிளகாய்த்தூள், வேர்க்கடலைப் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்த இரண்டு மாவுக் கலவையையும் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் தனித்தனியாக பிசைந்து கொள்ளவும். இரண்டையும் தனித்தனியே சிறு சிறு அப்பளங்களாக இடவும். இரண்டு மைதா அப்பளத்தின் நடுவே ஒரு கடலை மாவு அப்பளத்தை வைத்து குழவியால் பெரிதாக இட்டு, ரவுண்டாகவோ, முக்கோண வடிவத்திலோ 'கட்' செய்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கரகர ஸ்நாக்ஸ் ரெடி!
Subscribe to Posts [Atom]
Post a Comment