Monday, July 19, 2010
காலிஃப்ளவர் கொத்சு
காலிஃப்ளவர் கொத்சு
தேவையானவை: காலிஃப்ளவர் - 400 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள் - தலா 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக்கி, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்தவற்றை குச்சி போல் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலை, கொஞ்சம் தண்ணீர் விட்டு, துவையல் போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய காலிஃப்ளவர், தேங்காய் விழுது,பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: நார்ச்சத்து நிறைந்த இந்த உணவு, ரத்தத்தை சுத்தப்படுத்தும். வயிற்று உபாதைகளை சரிசெய்யும்.
Subscribe to Posts [Atom]
Post a Comment