Monday, July 19, 2010
ஆப்பிள் பாதுஷா
தேவையானவை: ஆப்பிள்பழத் துண்டுகள், சர்க்கரை - தலா கால் கப், செர்ரிப்பழம் - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), மைதா மாவு - ஒரு கப், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், டால்டா - 5 டீஸ்பூன், தேங்காய் துருவல், நெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கேசரி பவுடர், எண்ணெய் - தேவையான அளவு, பாதாம் பருப்பு - சிறிதளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கேசரி பவுடர் சேர்த்து கம்பிப் பாகு பதத்தில் காய்ச்சவும். கடாயில் டால்டாவை விட்டு, மைதா மாவு, தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, நறுக்கிய ஆப்பிள், செர்ரி பழத்துண்டுகள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதை அப்படியே சர்க்கரை பாகில் கொட்டி நெய் சேர்த்து கரண்டிக் காம்பினால் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை விரும்பிய அளவில் வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். ஒவ்வொரு பாதுஷா மீதும் பாதாம் பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.
சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் சுவையான ஸ்வீட் இது

Subscribe to Posts [Atom]
Post a Comment