Monday, July 19, 2010
வெஜிடபிள் இட்லி
வெஜிடபிள் இட்லி
தேவையானவை: அவல் - அரை கிலோ, முளைகட்டி, உலர வைத்த கோதுமை - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒன்றரை கப், பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டி, உலர வைத்த கோதுமையை மிக்ஸியில் அரைக்கவும். அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற விடவும். ஊறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கோதுமை, அவலுடன் தேங்காய் துருவல், பிளாக் சால்ட் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் மெல்லிய துணி விரித்து, இந்த மாவை இட்லி போல் விடவும். 10 நிமிடம் கழித்து... துணியிலிருந்து மெதுவாக இதனைப் பிரித்தெடுக்க... நேச்சுரல் இட்லி தயார். இதனுடன் காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.
குறிப்பு: இதற்குத் தொட்டுக்கொள்ள இயற்கை சாம்பார் ஏற்றது.
Subscribe to Posts [Atom]
Post a Comment