Monday, July 19, 2010
வெண்பூசணிக் கூட்டு
வெண்பூசணிக் கூட்டு
தேவையானவை: வெண்பூசணி - 500 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், வறுத்துப் பொடித்த பொட்டுக்கடலைத்தூள் - முக்கால் கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், முளைகட்டிய தானியம் (ஏதாவது ஒருவகை பயறு) - கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். வெண்பூசணியைக் கழுவி தோல், கொட்டை நீக்கி தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காய் உட்பட கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும், ஒரு பாத்திரத்தில் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
இதேபோல் சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, வாழைத்தண்டு, புடலங்காய் போன்ற அனைத்து நீர்சத்து காய்களிலும் செய்யலாம்.
குறிப்பு: இதை ரெகுலராக செய்து சாப்பிட்டு வர... மூலவியாதி, அதனால் உண்டாகும் எரிச்சல் போன்றவை நீங்கும். முகம் பொலிவு பெறும்.
Subscribe to Posts [Atom]
Post a Comment