Tuesday, September 14, 2010
தாளிப்பு கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். பிறகு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கட்டியில்லாமல் கிளறி, ஆற விடவும். மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விருப்பமான வடிவில் உருட்டி, ஆவியில் வேகவிட... தாளிப்பு கொழுக்கட்டைகள் தயார்!
புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அரைத்து இதே போல் செய்யலாம்.
Subscribe to Posts [Atom]
Post a Comment