Sunday, November 7, 2010
கட்டா மிட்டா உசிலி
கட்டா மிட்டா உசிலி
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - கால் கப், முளைக்கீரை - 2 சிறிய கட்டு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, வதக்கி வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும். தீயை நிதானமாக எரியவிட்டு பருப்பு வேகும்வரை கிளறவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து, நெய் விட்டு, ஐந்து நிமிடம் கிளறவும். உதிர் உதிராக வந்ததும், வதக்கி வைத்துள்ள கீரையைச் சேர்த்து வதக்கி... உப்பு, மிளகாய்த்தூள் போட்டு சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தோசையின் உள்ளே மசாலாவாக பயன்படுத்தலாம். ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பூரிக்கு மசாலாவாகவும் செய்யலாம். சத்தும் சுவையும் நிறைந்தது. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Subscribe to Posts [Atom]
Post a Comment