Sunday, November 7, 2010
வண்ண மிட்டாய்
வண்ண மிட்டாய்
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு, வறுத்து அரைத்த பாசிப்பருப்பு மாவு - தலா ஒரு கப், வேர்க்கடலைப் பொடி - அரை கப், சர்க்கரை - இரண்டரை கப், நெய் - ஒன்றரை கப், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, கல்கண்டு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வண்ண மிட்டாய்பொடி - கால் டீஸ்பூன், பேரீச்சம்பழத் துண்டுகள், செர்ரிப்பழத் துண்டுகள் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் சிறிது நெய் விட்டு, காய்ந்ததும் பேரீச்சை, செர்ரி, உலர்ந்த திராட்சை, முந்திரியைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு, சர்க்கரைத்தூள் போட்டு... நெய்யில் வறுத்த பேரீச்சை, செர்ரி, உலர்ந்த திராட்சை, முந்திரி, கல்கண்டு, வண்ண மிட்டாய்ப்பொடி, வேர்க்கடலைப் பொடி, மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு ஒரு கரண்டி காம்பினால் இந்த கலவையை நன்றாகக் கிளறி, விரும்பிய அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இது மிட்டாய் - பழச்சுவையுடன் அற்புதமாக இருக்கும்.
Subscribe to Posts [Atom]
Post a Comment