Sunday, November 7, 2010
முளைக்கொள்ளு குழம்பு!
முளைக்கொள்ளு குழம்பு!
தேவையானவை: கொள்ளு - கால் படி, கொத்தமல்லி - 150 கிராம், மிளகாய் வற்றல் - 5 அல்லது 6, சீரகம் - ஒரு டீ ஸ்பூன், பூண்டு - 4 அல்லது 5 பல், சின்ன வெங்காயம் - 200 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்ப்பால் - ஒரு கப்.
செய்முறை: தண்ணீரில் 'கொள்ளை' நன்றாக அலசி, ஒரு துணியில் சிறிய மூட்டையாக கட்டி வைத்துவிடவும். இரண்டு நாட்களில் நன்றாக முளைவிட்டிருக்கும். அதை வேக வைக்கவும். கொத்தமல்லி, மிளகாய் வற்றல், சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை லேசாக எண்ணெய் விட்டு வறுத்து, அதனுடன் வேக வைத்திருக்கும் கொள்ளில் சிறிதளவு சேர்த்து, மசாலாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடுகு, கறிவேப்பிலை, சோம்பு, சின்ன வெங்காயம் போட்டுத் தாளித்து, அதனுடன் வேக வைத்த கொள்ளு, அரைத்த மசாலா ஆகியவற்றை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் தேங்காய்ப் பாலையும் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். நன்றாக கொதி வந்த பிறகு இறக்கி, சூடான சாதத்தில் ஊற்றி சத்தாக சாப்பிடலாம். (தேவைப்பட்டால் தேங்காயை சிறிய சிறிய துண்டாக்கி குழம்பில் போட்டுக் கொள்ளலாம்).
Subscribe to Posts [Atom]
Post a Comment