Sunday, May 30, 2010

 

பேபி கார்ன் ரைஸ்


பேபி கார்ன் ரைஸ்
தேவையானவை: பேபி கார்ன் - 6 (சிறு சிறு துண்டுகளாக்கவும்), அரிசி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கியது), இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 3, பட்டை - ஒரு சிறிய துண்டு, ஏலக்காய் - தலா ஒன்று, கிராம்பு -சிறிதளவு, சோம்பு - கால் டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பேபி கார்ன் போட்டு வதக்கவும். பிறகு, அரிசி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்க்கவும். 2 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும், 10 நிமிடம் அடுப்பை 'சிம்'மில் வைத்து, இறக்கவும்.

 

வெஜிடபிள் இட்லி


வெஜிடபிள் இட்லி
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், காலிஃப்ளவர் கலவை - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய காய்கறிக் கலவை, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும் (காய்கறிகளை வதக்கியும் சேர்க்கலாம்). இந்த மாவை, இட்லித் தட்டில் விட்டு, இட்லிகளாக சுட்டு எடுக்கவும்.
காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

 

வெஜ் குழிப்பணியாரம்


வெஜ் குழிப்பணியாரம்
தேவையானவை: இட்லி மாவு 2 கப், துருவிய கேரட் - கால் கப், நறுக்கிய வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். கேரட், வெங்காயம் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும். இந்தக் கலவையை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, மாவை பணியாரங்களாக இட்டு, வெந்ததும் சுட்டு எடுக்கவும்.
கேரட்டுக்கு பதில், பொடியாக நறுக்கிய கோஸ், காலிஃப்ளவர் சேர்த்தோ அல்லது மூன்று காய்கறிகளும் சேர்த்தோ செய்யலாம்.
இதற்குத் தொட்டுக்கொள்ள காரச்சட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.


 

கேரட்-பட்டாணி ரைஸ்


கேரட்-பட்டாணி ரைஸ்
தேவையானவை: சாதம் 2 கப், துருவிய கேரட் - ஒரு கப், உரித்த பட்டாணி - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, நறுக்கிய பச்சை மிளகாய் - 3, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, சோம்பு - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை மிளகாய், கேரட், பட்டாணி, உப்பு சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்ததும், சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி, புதினா தூவிக் கிளறி இறக்க, கேரட், பட்டாணி ரைஸ் ரெடி!
இதற்கு சிப்ஸ், ஆனியன் ரய்தா சரியான சைட் டிஷ்.


 

சுரைக்காய் சப்பாத்தி


தேவையானவை: கோதுமை மாவு - 1 கப், துருவிய சுரைக்காய் - கால் கப், பச்சை மிளகாய்-இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.
.
செய்முறை: கோதுமை மாவுடன் துருவிய சுரைக்காய், பச்சை மிளகாய்-இஞ்சி விழுது, சீரகம், உப்பு சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். பிறகு, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக்கல்லில் எண்ணெய் வார்த்து சுட்டு எடுக்கவும். சுட்ட சப்பாத்திகளின் மீது சிறிது நெய் தடவி வைக்கவும்.
இது, சாதாரண சப்பாத்தியைவிட சத்து மிகுந்தது.

 

ஃப்ரூட்ஸ்-நட்ஸ் இட்லி

 தேவையானவை: வாழைப்பழம் - 1, பப்பாளி, ஆப்பிள் பழத் துண்டுகள் - தலா அரை கப், திராட்சை, முந்திரி - தலா 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், திக்கான வெல்லக் கரைசல் - 4 டீஸ்பூன் அல்லது சர்க்கரை - 4 டீஸ்பூன், தேங்காய் துருவல், கேரட் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், இட்லி மாவு - 2 கப், பாதாம் துருவல் - சிறிதளவு.
செய்முறை: வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பப்பாளி, ஆப்பிள் துண்டுகளை சேர்க்கவும். கேரட் துருவல், தேங்காய் துருவலை லேசாக நெய்யில் வதக்கி கலக்கவும். முந்திரி, திராட்சை இரண்டையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும். இந்தக் கலவையை இட்லி மாவில் கொட்டி, சர்க்கரை அல்லது வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும். இட்லித் தட்டில் நெய் தடவி, மாவுக் கலவையை ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுத்து, பாதாம் துருவலைத் தூவி பரிமாறவும்.



Saturday, May 1, 2010

 

hi

hi

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]