Wednesday, April 14, 2010

 

தக்காளி பர்ஃபி

தக்காளி பர்ஃபி

தேவையானவை: தக்காளி - 3, தேங்காய் துருவல் - ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - இரண்டரை கப்.



செய்முறை: கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு தோலை உரித்து விட்டு ஜூஸாக்கவும்.



தேங்காய் துருவல், தக்காளி ஜூஸ், சர்க்கரை ஆகியவற்றை அடி கனமான, அகலமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் வைத்து கரண்டியால் கிளறவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், எசன்ஸ் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

இந்த பர்ஃபி புளிப்பு, இனிப்பு என புதுவித சுவையில் இருக்கும் .

Monday, April 5, 2010

 

கோடை​யில் குளிர...



* எலு​மிச்​சம் பழத்தை வெது​வெ​துப்​பான நீரில் பிழிந்து,​​ குளு​கோஸ் மற்​றும் தேன் கலந்து குடிக்க,​​ சுவை​யும் கூடும்.​ உடம்​பிற்​கும் நல்​லது.​

* இள​சான நுங்​கு​களை,​​ தோல் நீக்கி கையி​லேயே துண்​டு​க​ளாக்கி,​​ ​(மிக்​ஸி​யில் அடித்​தால் பசை​போல் இருக்​கும்)​.​ பால் சேர்த்து ஏலக்​காய்,​​ சர்க்​கரை கலந்து பிரிட்​ஜில் வைத்​துக் குளி​ரச் செய்து பரு​க​லாம்.​

* இள​நீ​ரில் உப்பு எலு​மிச்சை சாறைக் கலந்து புதி​னாவை நறுக்கி அதில் சேர்த்து பிரிட்​ஜில் வைத்து குளிர்ந்​த​தும் குடித்​துப் பாருங்​கள்.​ குற்​றால அரு​வி​யில் குளித்​த​து​போல் இருக்​கும்.​

* கோடை​யில் நீர்​மோர் தயா​ரிக்​கும்​போது நீர்​மோ​ரில் இஞ்சி,​​ பச்சை மிள​காய்க்​குப் பதி​லாக சிறி​த​ளவு மிளகு ரசப் பொடி​யைச் சேர்த்​துப் பாருங்​கள்.​ அதன் சுவையே தனி.​

* "ஐஸ்'க்கா​கத் தண்​ணீரை ப்ரீ​ச​ரில் வைக்​கும்​போது சிட்​டிகை உப்​புத்​தூள் கலந்து வைத்​தால் ஜூ​ஸில் கலக்​கும்​பொ​ழுது அதன் இனிப்​புச் சுவை கூடு​த​லா​கத் தெரி​யும்.​ தாக​மும் அடங்​கும்.​

* கோடை​யில் நீரா​கா​ரம் சாப்​பி​டு​வது உட​லுக்கு நல்​லது.​ ஆனால் இர​வில் சாதத்​தில் நீர் ஊற்றி வைத்​தால்,​​ கோடை வெப்​பத்​திற்கு சாதம் கூழாக மாறி​வி​டும்.​ இதற்கு இர​வில் சாதத்​தில் தண்​ணீர் ஊற்​றும்​போது,​​ சிறி​த​ளவு உப்​பைக் கலந்து வைத்​தால் காலை​யில் கூழாக மாறாது.​

* புதினா,​​ ரோஜா இதழ்,​​ செம்​ப​ருத்​திப்பூ,​​ சிறி​த​ளவு பெப்​பர்​மின்ட் முத​லி​ய​வற்​றைப் பெரிய பாத்​தி​ரத்​தில் போட்டு அது நிறைய குடி​நீர் ஊற்றி கண்​ணா​டித் தட்​டால் மூடி வெயி​லில் ​ காலை பத்து முதல் மதி​யம் மூன்று வரை வைக்​க​வும்.​ பிறகு இதனை வடி​கட்டி ஆற வைத்​துக் குடித்​தால் சூடு தணி​யும்.​

* கோடை​யைச் சமா​ளித்து உடல் நலம் காக்க எலு​மிச்சை சாறு அடிக்​கடி அருந்​து​வது நல்​லது.​ எலு​மிச்​சம் பழச்​சா​றில் வைட்​ட​மின் சி நிறைந்து இருப்​ப​தால் ​ நோய் எதிர்ப்பு சக்​தி​யாக செயல்​பட்டு உட​லுக்​குள் எந்​தப் பாதிப்​பும் ஏற்​ப​டா​மல் பார்த்​துக் கொண்டு தோலில் அரிப்பு,​​ தடிப்பு போன்ற பாதிப்​பு​கள் ஏற்​ப​டா​மல் தடுத்து பள​பள மேனி​யு​டன் இளமை தோன்​றத்​து​டன் காணப்​பட உத​வு​கி​றது.​

* வெள்​ள​ரிக்​காய்​க​ளைத் துண்​டு​ துண்​டாக வெட்டி ஒரு பாத்​தி​ரத்​தில் போட்டு மோர் ஊற்றி அதில் கொத்​து​மல்லி,​​ இஞ்சி,​​ வெட்​டி​வேர் மணக்​கப்​போட்டு உச்சி நேர வெயி​லில் இரண்டு டம்​ளர் பரு​கிப் பாருங்​கள்.​ உடல் "குளு​குளு'வென இருக்​கும்.​ கோடை வெப்​பத்​தால் சிறு​நீ​ர​கம் பாதிக்​கப்​ப​டா​மல் பாது​காப்​பாக இருக்க

வெள்​ள​ரிக்​கா​யி​லுள்ள பொட்​டா​சிய உப்பு உத​வு​கி​றது.​

* குடி​நீர் பானை​யில் சுத்​தம் செய்த ஆவா​ரம் பூக்​க​ளைப் போட்டு வைத்து இந்​நீ​ரைக் குடித்​தால்,​​ நாவ​றட்சி,​​ நீங்​கும்.​ கண்​க​ளுக்​குக் குளிர்ச்சி கிடைக்​கும்.​


Sunday, April 4, 2010

 

குக்கரி க்வீன்!

குக்கரி க்வீன்!ஏப்ரல் 04,2010,14:34 IST

பாசிபருப்பு சீடை
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 500 கிராம்,
பாசிப் பருப்பு - 100 கிராம்
ஜவ்வரிசி (பெரியது) - 50 கிராம், நெய் - சிறிது, உப்பு, சீரகம் - தேவையான அளவு, காரம் தேவையெனில் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
அரிசியைக் கழுவி வெயிலில் உலர்த்தவும். பாசிப்பருப்பை வாசனை வரும் வரை எண்ணெயின்றி வறுக்கவும். ஜவ்வரிசையையும் அவ்வாறே பொரிக்கவும். எல்லாவற்றையும் கலந்து மிஷினில் கொடுத்து மாவாக்கவும். மாவை சலித்து எடுத்து அதோடு நெய், உப்பு, சீரகம், (தேவையெனில் சிறிது மிளகாய்த்தூள்) சேர்த்து உருட்டாமல் (தட்டைப் பயிறுபோல்) நீள் வட்டமாக உருப்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் சிறிது சிறிதாக மிதமானத் தீயில் போட்டு வெந்தவுடன் எண்ணெயை வடித்து öடுக்கவும்.
- எஸ்.என்.கமலா, மதுரை.


உளுந்துக்களி
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி - 200 கிராம், உளுந்து அல்லது தோல் உள்ள உளுந்தம் பருப்பு - 200 கிராம், நல்லெண்ணெய் - 200 கிராம், கருப்பட்டி (பனைவெல்லம்) 400 கிராம், தண்ணீர் 1/4 லிட்டர்.
செய்முறை
அரிசியையும் உளுந்தையும் நன்றாகச் சுத்தம் செய்து மிஷினில் மாவாகக் அரைத்துக் கொள்ளவும் அடிகனமான பாத்திரம் ஒன்றில் தண்ணீரை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். அதில் கருப்பட்டியைப் போட்டு, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். அதேப் பாத்திரத்தில் வடிகட்டிய கருப்பட்டி நீரை ஊற்றி அரிசி - உளுந்து மாவை சிறிது சிறிதாக ஒருவர் தூவவும். இன்னொருவர் மரக்கரண்டியால் மிதமான தீயில் கைவிடாமல், மாவு கட்டி சேராதவாறு, கிளறிக கொண்டே இருக்கவும்.
அவ்வப்போது நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும்.மாவு அல்வா பதம் (சட்டியில் ஒட்டாதவாறு) வந்ததும் இறக்கவும். ஆறிய பின் கையில் நல்லெண்ணெயைத் தொட்டுக் கொண்டு, பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உருட்டி வைக்கவும். தேவையெனில் முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.
உடல் பலத்துக்கு மிகவும் சத்தான களி. பூப்பெய்திய பெண்களுக்குப் பதினாறு நாட்களும் தொடர்ந்து இதைக் கொடுப்பார்கள். இடுப்புக்குப் பலம். இந்தக் களியை சாப்பிட்டு இருபது நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
எஸ்.லோகா சுப்ரமண்யன், சிந்துபூந்துறை.


குக்கீஸ்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 4 கப், பாசிப்பருப்பு - 1 கப், வெல்லம் - 2 1/2 கப், கொப்பரைத்துருவல் - 1 கப், வறுத்த வெள்ளை எள், கசகசா - தலா 1 டேபிள் ஸ்பூன், பொடி செய்த கிராம்பு, ஜாதிக்காய் - தலா 1 டீஸ்பூன், உருக்கிய நெய் - 1 டேபிள் ஸ்பூன், குக்கீ அச்சுகள் - தேவைக்கேற்ப.
செய்முறை:
சுத்தம் செய்த புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி துணியில் உலர்த்தவும். சற்று ஈரம் காய்ந்ததும் கனமான வாணலியில் அரிசியைப் போட்டு பொன் நிறமாத பொரித்தெடுக்கவும். பாசிப்பருப்பையும் பொன்வறுவலாக வறுக்கவும், வறுத்த அரிசி, பருப்பை மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும்.
இதில் கொப்பரைத் துருவல், வறுத்த எள், கசகசா மற்றும் பொடித்த ஜாதிக்காய் கிராம்புத்தூள் எல்லாம் கலக்கவும். குக்கீ அச்சுகளின் உள்புறம் நெய் தடவி வைக்கவும். வெல்லத்தை ஒரு கப் நீர் விட்டு வெல்லக் கரைசல் வைத்துக் கசடை வடிகட்டி, அடி கனமான வாணலியில் விட்டு பாகு காய்ச்சவும். (பாகை நீரில் போட்டால் நன்றாக உருட்ட வர வேண்டும்)
பாகை கலந்து வைத்துள்ள பொடியில் விட்டு நன்றாகக் கிளறவும். கை பொறுக்கம் சூட்டில் இந்தக் கலவையை குக்கீ அச்சுகளில் வைத்து எடுக்கவும்.
- ஜெயலட்சுமி கணேசன், மும்பை


முந்திரி தவலை வடை
தேவையான பொருள்கள்:
புழுங்கலரிசி - 1 கப், துவரம் பருப்பு - 1/2 கப், கடலைப்பருப்பு - 1/4 கப், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, பொடித்த முந்திரிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் (சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரமும், பருப்பு வகைகளை ஒரு மணி நேரமும் ஊற வைக்கவும். அரிசி, பருப்பு வகைகள், சிவப்பு மிளகாய், தேங்காய்த் துரவல், பெருங்காயம், உப்பு போட்டு அரைக்கவும். (மாவு கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இருக்கக்கூடாது) அரைத்த மாவில் சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய், முந்திரிப் பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் சின்னக் குழிவு கரண்டியால், மாவை எடுத்து எண்ணெயில் ஒரே இடத்தில் ஊற்றவும். மாவுதானே பரந்து அழகாகக் கிண்ணம் போல் வரும். இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு தேங்காய்ச் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
- சீதாலட்சுமி, தானே.


பெசரட்டு


தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1/2 கப், பாசிப்பருப்பு - 1 கப், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், பீர்க்கங்காய் தோல் - 1/2 கப், பனீர் துருவல் - 1/4 கப், கேரட் துருவல் - 1/4 கப், கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை - தலா 1 கட்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் மைய அரைத்த பீர்க்கங்காய் தோலைச் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து தோசைக்கல்லில் அடையாக ஊற்றவும். அடை நன்றாக வெந்ததும் துருவிய பனீர், கேரட், கொத்துமல்லி தழை தூவி அடையை இரண்டாக மடித்துப் பரிமாறலாம். பீர்க்கங்காய் தோலின் சத்து, வீணாகாமல் கிடைக்கும். தக்காளிச் சாறுடன் பரிமாற அருமையாக இருக்கும்.
- பி.காந்தா, ஹைதராபாத்.



Friday, April 2, 2010

 

பயத்தம் பருப்பு கஞ்சி

தேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு - ஒரு கப், பாகுவெல்லம் - ஒரு கப், ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு.

செய்முறை: பாசிப் பருப்பை வாணலியில் வாசனை வரும் அளவுக்கு வறுத்து, அடி கனமான பாத்திரத்தில் நன் றாக குழைய வேக விடவும். வெந்த பருப்பில் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். வெல்லத்தைப் பொடி பண்ணி நீர் விட்டு வாணலியில் வைத்து கரைந்தவுடன் வடிகட்டவும். இதை வெந்த பருப்போடு சேர்த்து வெல்ல வாசனை போகும் வரை கிளறிவிட்டு இறக்கி வைத்து ஏலக்காய்ப் பொடி போடவும். இந்த பாயசம் நீர்க்கதான் இருக்க வேண்டும்.

 

வெல்ல வள்ளிக் கிழங்கு

வெல்ல வள்ளிக் கிழங்கு

தேவையான பொருட் கள்: சக்கரை வள்ளிக் கிழங்கு - 4கப், ஏலம், சுக்குப்பொடி - சிறிதளவு, வெல்லம் - 300 கிராம்.

செய்முறை: மண் போக சுத்தம் செய்த வள்ளிக்கிழங்கை பெரியதாக நறுக்கி அடி கனமான பாத்திரத்தில் வேகவிடவும்.வாணலியில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் விட்டுக் கரைந்ததும்,வடிகட்டி திரும்பவும் வாணலியிலேயே ஊற்றி கூடவே, ஒரு கப் நீரும் விட்டுக் கொதிக்க விடவும். இதில் ஏலக்காய், சுக்குப் பொடி போட்டு, திக்காக பாகு வரும்போது வேக வைத்த வள்ளிக்கிழங்கைப் போட்டால் ஆகா என்ன டேஸ்ட். வெல்லப் பாகில் ஊற ஊற வள்ளிக்கிழங்கின் ருசியே ருசி.

 

அக்கார வடிசல்!


அக்கார வடிசல்!

பெருமாள் கோயில்களில் பிரசாதமாக தரப்படும் இந்த அக்கார வடிசலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. எல்லா மாநிலங்களிலும் சரி, வட்டாரங்களிலும் சரி ரொம்பவும் ஃபேமஸாக இருக்கும் ரெசிபிகளை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும். அதாவது, அந்தந்தப் பகுதிகளில் அதிகமாக விளையும் வி¬ ளபொருள்களை வைத்துதான் அந்த ரெசிபிகள் தயாரிக்கப்பட்டிருக்கும். தென் தமிழகத்தில் ரொம்பவும் ஃபேமஸான இந்த அக்கார வடிசலின், அடிப்படையான பொருள் தமிழகத்தில் அதிகமாக பயிரிடப்படும் அரிசிதான் என்பதை கவனியுங்கள். இனி ரெசிபிக்கு போகலாம்!

ஒரு கப் பச்சரிசி, லு கப் பாசிப்பருப்பு இரண்டையும் களைந்து, ஈரம் போக சற்றே உலர வைத்து, வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர்விட்டு, அதில் வறுத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு வேக விடுங்கள். இன்னொரு அடுப்பில் 2 கப் பாலை பொங்கப் பொங்க காய்ச்சுங்கள். இந்தப் பாலை வெந்து கொண்டிருக்கும் அரிசி - பருப்பில் விட்டுக் குழைய விடுங்கள். இத்துடன் 3 கப் சர்க்கரையை கம்பிப் பாகு பதம் வைத்து அதையும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருங்கள். இல்லையென்றால் அடிப்பிடித்துவிடும். இன்னொரு வாணலியில் 100 கிராம் நெய்விட்டு, அதில் 25 கிராம் முந்திரிப் ப ருப்பு, 10 கிராம் திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து அதை அப்படியே குழைந்து ரெடியாகவுள்ள அக்கார வடிசலில் கொட்டிக் கிளறுங்கள். தேவைப்பட்டால் பச்சைக் கற்பூரம் சேருங்கள். மேலே ஒரு டீஸ்பூன் ஏலப் பொடி தூவினால் வாய்மட்டுமல்ல, வயிறு வரை இனிக்கும் சவுத் இண்டியன் பாரம்பர்ய ஸ்வீட் ரெடி!

 

மூங்தால் ஷீரா

மூங்தால் ஷீரா

இது மும்பை ஸ்பெஷல். இது பாசிப்பருப்பில் செய்யப்படும் ஒரு இனிப்பு. மும்பையில் இந்தப் பருப்புதான் அதிகம் விளையக் கூடியது.

தேவையான அளவு பாசிப்பருப்பை ஊறவைத்து, அதை கிரைண்டரில் கெட்டியாக அரையுங்கள். ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் விட்டு, அதில் அரைத்த ப ருப்பு விழுதைப் போட்டு, அதிலிருக்கும் நீர் வற்றிப் போகும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். பருப்பு உதிர் உதிராக வந்துவிடும். சர்க்கரையை பாகு வைத்து, அதை பாசிப்பருப்புடன் சேர்த்து கிளறுங்கள். மேலே நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை அப்படியே நெய்யுடன் மூங்தாலில் ஊற்ற மும்பை ஸ்பெஷல் ஸ்வீட்டான மூங்தால் ஷீரா சுவைக்க ரெடி!

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]