Saturday, July 31, 2010

 

ssd

dsd

Sunday, July 25, 2010

 

fgfg

fgfg

Monday, July 19, 2010

 

ஸ்டஃப்டு டமாட்டர்

ஸ்டஃப்டு டமாட்டர்
தேவையானவை: தக்காளி - 10, பொட்டுக்கடலை - 50 கிராம், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 50 கிராம், தேங்காய் துருவல் - கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் - சிறிதளவு
செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் எல்லவற்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் நீர் விட்டுக் கெட்டியாக அரைக்கவும். தக்காளியை நன்கு கழுவி, அதன் மேல் பக்கத்தில் கீறவும். அதற்குள் அரைத்த கலவையை வைத்து, மேலே நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.
குறிப்பு: இதை அடிக்கடி செய்து சாப்பிட ரத்த சோகை விலகி, இளமை மேம்படும். உடல் தொப்பை, கொலஸ்ட்ரால், அதிக உடல் எடையை சரிசெய்யும்.


 

இயற்கை சாம்பார்

இயற்கை சாம்பார்
தேவையானவை: பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடி - தலா 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - கைப்பிடியளவு, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், தக்காளி - 200 கிராம், குடமிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், முட்டைகோஸ், வெண்பூசணி - தலா 100 கிராம், கேரட் - 200 கிராம், குடமிளகாய் - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு - 3, இஞ்சி - சிறிய துண்டு, பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். அல்லது தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். குடமிளகாய், பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் தனியே அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடியை தேவையான அளவுத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் காய்கறி துருவல், அரைத்த தேங்காய் விழுது, சாம்பார் பொடி, அரைத்த கொத்தமல்லி, கறிவேப்பிலை விழுது, சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, பிளாக் சால்ட் போட்டு கலக்கினால் இயற்கை சாம்பார் தயார்.
குறிப்பு: இதனை அவல் சாதம், நேச்சுரல் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம்.


 

வெஜிடபிள் இட்லி

வெஜிடபிள் இட்லி
தேவையானவை: அவல் - அரை கிலோ, முளைகட்டி, உலர வைத்த கோதுமை - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒன்றரை கப், பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டி, உலர வைத்த கோதுமையை மிக்ஸியில் அரைக்கவும். அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற விடவும். ஊறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கோதுமை, அவலுடன் தேங்காய் துருவல், பிளாக் சால்ட் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் மெல்லிய துணி விரித்து, இந்த மாவை இட்லி போல் விடவும். 10 நிமிடம் கழித்து... துணியிலிருந்து மெதுவாக இதனைப் பிரித்தெடுக்க... நேச்சுரல் இட்லி தயார். இதனுடன் காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.
குறிப்பு: இதற்குத் தொட்டுக்கொள்ள இயற்கை சாம்பார் ஏற்றது.


 

அவல் மிக்ஸர்

அவல் மிக்ஸர்
தேவையானவை: அரிசி அவல் (அ) சோள அவல் - அரை கிலோ, தேங்காய் துருவல் - அரை கப், நறுக்கிய குடமிளகாய் - ஒன்று, வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 50 கிராம், பொரி - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பொடித்த வெல்லம் - 250 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தப்படுத்தவும். சுத்தப்படுத்திய அவலை, ஒரு பாத்திரத்தில் போட்டு... அதனுடன் வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை, பொரி, நறுக்கிய குடமிளகாய், பொட்டுக்கடலை, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: மாலை நேர டிபனாகவும் பயணத்தின்போது நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடலாம். மணிபர்சுக்கும், உடல் நலத்துக்கும் சேஃபானது இது!


 

நொறுக்ஸ் அவல்

நொறுக்ஸ் அவல்
தேவையானவை: அவல் - அரை கிலோ, வறுத்த வேர்க் கடலை - 50 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பொடித்த வெல்லம் - 100 கிராம்.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்று சேர்த்து, கலந்து பரிமாறவும். காரம் வேண்டுபவர்கள், நறுக்கிய குடமிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.
குறிப்பு: குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர டிபனாக சாப்பிடக் கொடுக்கலாம்.


 

எள்ளுருண்டை லட்டு

எள்ளுருண்டை லட்டு
தேவையானவை: வறுத்த எள் - 400 கிராம், திராட்சை - 100 கிராம், பேரீச்சை - 300 கிராம், முந்திரி - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: எள்ளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பேரீச்சையின் கொட்டையை நீக்கவும். திராட்சை, பேரீச்சையைக் கழுவவும். எள்ளை, மிக்ஸியில் பொடித்து.. திராட்சை, பேரீச்சை சேர்த்து மீண்டும் அரைக்கவும். பிறகு, அதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு: பாலூட்டும் தாய்மார்களுக்கும், உடல் இளைத்து இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்லது.

 

வெண்பூசணிக் கூட்டு

வெண்பூசணிக் கூட்டு
தேவையானவை: வெண்பூசணி - 500 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், வறுத்துப் பொடித்த பொட்டுக்கடலைத்தூள் - முக்கால் கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், முளைகட்டிய தானியம் (ஏதாவது ஒருவகை பயறு) - கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். வெண்பூசணியைக் கழுவி தோல், கொட்டை நீக்கி தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காய் உட்பட கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும், ஒரு பாத்திரத்தில் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
இதேபோல் சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, வாழைத்தண்டு, புடலங்காய் போன்ற அனைத்து நீர்சத்து காய்களிலும் செய்யலாம்.
குறிப்பு: இதை ரெகுலராக செய்து சாப்பிட்டு வர... மூலவியாதி, அதனால் உண்டாகும் எரிச்சல் போன்றவை நீங்கும். முகம் பொலிவு பெறும்.


 

காலிஃப்ளவர் கொத்சு

காலிஃப்ளவர் கொத்சு
தேவையானவை: காலிஃப்ளவர் - 400 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள் - தலா 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக்கி, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்தவற்றை குச்சி போல் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலை, கொஞ்சம் தண்ணீர் விட்டு, துவையல் போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய காலிஃப்ளவர், தேங்காய் விழுது,பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: நார்ச்சத்து நிறைந்த இந்த உணவு, ரத்தத்தை சுத்தப்படுத்தும். வயிற்று உபாதைகளை சரிசெய்யும்.


 

மேட்ச் ஸ்டிக் சாலட்

மேட்ச் ஸ்டிக் சாலட்
தேவையானவை: கேரட் - 2, தக்காளி - 2, வெள்ளரிக்காய், வெங்காயம் - தலா ஒன்று, முட்டைகோஸ் - 200 கிராம், வெண்பூசணி, புடலை, பீர்க்கங்காய், சௌசௌ, முள்ளங்கி, சுரைக்காய்... இவற்றில் எதாவது ஒன்று - 200 கிராம், தேங்காய் துருவல் - அரை கப், எலுமிச்சம்பழம் - ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பொடித்த வெல்லம் - தேவையான அளவு, பிளாக் சால்ட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - தேவையான அளவு.
செய்முறை: கொடுத்துள்ள எல்லா காய்கறிகளையும் நன்றாகக் கழுவி, தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி சாறு எடுக்கவும். நறுக்கிய காய்கறிகளுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பொடித்த வெல்லம், பிளாக் சால்ட் சேர்த்துக் கலக்க... மேட்ச் ஸ்டிக் சாலட் தயார்!
குறிப்பு: உடல் சூடு, மூலம், மாதவிடாய் கோளாறுகளை இது கட்டுப்படுத்தும். தொடர்ந்து சாப்பிட... இந்த உபாதைகள் நீங்கும்.



 

கோபா பெப்பர் பிஸ்கட்

தேவையானவை: மைதா மாவு, கடலை மாவு, வறுத்த வேர்க்கடலைப் பொடி - தலா ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவை சலித்து... மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடலை மாவில் மிளகாய்த்தூள், வேர்க்கடலைப் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்த இரண்டு மாவுக் கலவையையும் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் தனித்தனியாக பிசைந்து கொள்ளவும். இரண்டையும் தனித்தனியே சிறு சிறு அப்பளங்களாக இடவும். இரண்டு மைதா அப்பளத்தின் நடுவே ஒரு கடலை மாவு அப்பளத்தை வைத்து குழவியால் பெரிதாக இட்டு, ரவுண்டாகவோ, முக்கோண வடிவத்திலோ 'கட்' செய்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கரகர ஸ்நாக்ஸ் ரெடி!


 

பொரி அரிசி புட்டு

பொரி அரிசி புட்டு
தேவையானவை: அரிசி மாவு (அரிசியைப் பொரித்து அரைக்கவும்), வெல்லம் - தலா ஒரு கப், நெய் - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை மூடி, முந்திரிப் பருப்பு - 5, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தை தண்ணீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டவும். நெய்யில் முந்திரியை வறுத்துக் கொள்ளவும். காய்ச்சி வடிகட்டிய வெல்லக் கரைசலில் அரிசி மாவைக் கலந்து கரைத்து, அடுப்பில் 'சிம்'மில் வைத்து, சிறிது நெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். நன்றாக வெந்தவுடன் துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 

ஆப்பிள் பாதுஷா

தேவையானவை: ஆப்பிள்பழத் துண்டுகள், சர்க்கரை - தலா கால் கப், செர்ரிப்பழம் - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), மைதா மாவு - ஒரு கப், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், டால்டா - 5 டீஸ்பூன், தேங்காய் துருவல், நெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கேசரி பவுடர், எண்ணெய் - தேவையான அளவு, பாதாம் பருப்பு - சிறிதளவு


செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கேசரி பவுடர் சேர்த்து கம்பிப் பாகு பதத்தில் காய்ச்சவும். கடாயில் டால்டாவை விட்டு, மைதா மாவு, தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, நறுக்கிய ஆப்பிள், செர்ரி பழத்துண்டுகள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதை அப்படியே சர்க்கரை பாகில் கொட்டி நெய் சேர்த்து கரண்டிக் காம்பினால் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை விரும்பிய அளவில் வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். ஒவ்வொரு பாதுஷா மீதும் பாதாம் பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.
சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் சுவையான ஸ்வீட் இது

 

திடீர் வடை!

திடீர் வடை!
திடீரென்று வடை சாப்பிட ஆசை வந்தால் பொட்டுக் கடலையை கரகரப்பாக அரைத்து, வெங்காயம் - பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிப் போட்டுக் கலந்து வடையாக சுட்டுவிடலாம்.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]